உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / மாத ராசி பலன்

மாத ராசி பலன் மகரம்

மகரம்மகரம்.. உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: எதிர்காலத்தின்மீது நம்பிக்கைக்கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் அஷ்டமாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கையிருப்பு கூடும். வீண் செலவுகள் கட்டுக்குள் வரும். தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார் என்றாலும், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசித்து செய்வதால் நன்மை உண்டாகும். நட்பு வட்டத்தில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளிலும் செயல்களிலும் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் பேச்சுக்கு மதிப்பளிப்பதும், ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் நன்மையளிக்கும். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 3.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 26, 28. நவ. 1, 8, 10.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் நீங்கும். நன்மை உண்டாகும்.திருவோணம்: இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற முடிவுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை வழங்கி வந்த குருபகவான், அக். 20 முதல் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் எதிர்பாராத நெருக்கடிகளும், பிரச்னைகளும் உருவாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் அமையும். நன்றாகப் பழகிவந்த நண்பர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். குடும்பத்திலும் நேற்றுவரை இருந்த நிலை இனி மாறும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சங்கடங்கள் பிரச்னைகள் என்று உருவாகும். அஷ்டம ஸ்தானத்தில் நவ. 13 வரை ஞான மோட்சக் காரகன் கேது சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம். வியாபாரம் தொழிலில் மறைமுகத் தொல்லைகள் இருக்கும் என்பதால் அனைத்தையும் சமாளித்து வெளியில் வர வேண்டிய நிலை உருவாகும். இந்த நேரத்தில் ஒழுக்கத்தில் மிகவும் கவனம் தேவை. மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரும் பிரச்னைகளை உங்களால் எதிர்கொள்ள முடியும். நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். அரசு வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியையும் உடன் இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வது என்பது இந்த நேரத்தில் மிக அவசியம். உங்கள் பாக்கியாதிபதி அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணைக்கு தெரியாமல் எந்தவொரு முயற்சியிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். வேலைப் பார்க்கும் இடத்திலும் குடும்ப ரகசியங்களை நெருக்கமானவரிடமும் சொல்ல வேண்டாம். விவசாயிகளுக்கு அதிக உழைப்பு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 4.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 26, 29. நவ. 2, 8, 11.பரிகாரம்: அண்ணாமலையாரை வழிபட தடைகள் விலகி நன்மை உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: எந்தநிலை வந்தாலும் எதற்காகவும் அச்சப்படாமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மாதம் முழுவதும் தைரிய காரகன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் மனதில் இருந்த பயம் போகும். நண்பர்களுடன் இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வீண் செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய நிலை உண்டாகும். அக். 20 முதல் குரு அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். இதுவரை இருந்த ஆரோக்கியமான நிலையில் இனி மாற்றம் ஏற்படும். வரவு செலவில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செல்வாக்கு அந்தஸ்து என்று வாழ்ந்துவந்த நிலையில் ஒரு பின்னடைவு ஏற்படும்.  சிலருக்கு உடல்நிலை பாதிக்கும் என்பதால் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். நவ. 13 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற ஆசைகள் உருவாகும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான வழிகளிலும் செல்வீர்கள். தவறானவர்களுடைய அறிமுகம் கிடைக்கும். அவர்களால் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நிம்மதி என்பது கேள்விக்குறியாகும். குடும்பத்திலும் குழப்பம் உண்டாகும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் சனி பகவானும், ஜீவன ஸ்தானத்தில் நீச்சமடைந்திருக்கும் சூரியனும் உங்களைப் பாதுகாப்பர். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். எடுக்கும் வேலைகள் உங்கள் முயற்சிக்கேற்ப நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைத்திலும் நிதானமும் கவனமும் கொள்ள வேண்டும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் அவசரம் காட்ட வேண்டாம். ஷேர் மார்க்கெட் விவகாரத்திலும் எச்சரிக்கை அவசியம். விவசாயிகளுக்கு உழைப்புக்கூடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 5.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 26, 27. நவ. 8, 9.பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட மனக்கவலை விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !