உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / மாத ராசி பலன்

மாத ராசி பலன் ரிஷபம்

ரிஷபம்ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்:மனதில் தெளிவும் செயலில் உறுதியும் கொண்ட உங்களுக்கு புரட்டாசி  நன்மையான மாதமாகும். ஆத்ம காரகனான சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், பூர்வ புண்ணியாதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் மனதில் இருந்த பயம் விலகும். பிறரால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சப்தமாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுத்த பணிகளில் வெற்றி உண்டாகும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகி திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை, பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். கடன் தொல்லை விலகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்திலும் சாதகமான நிலை உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு வரவு கூடும். கடைநிலை ஊழியர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ரியல் எஸ்டேட், தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாதத்தின் இறுதியில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடி விலகி இணக்கம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: செப். 29.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24, 28. அக். 1, 6, 10, 15.பரிகாரம் மீனாட்சி அம்மனை வழிபட குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.ரோகிணி வாழ்க்கையில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதமாகும். அக். 7 வரை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.  உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பகை போட்டி என்றிருந்த நிலை மாறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு வழி அமைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியில் இருப்பவர்களுக்கு  நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அக். 8 முதல் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு சப்தம ஸ்தானத்தை பார்ப்பதால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் பூமிக்காரகன் செவ்வாயுடன் செப்.29 முதல் புதனும் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செய்து வரும் தொழில் எதிர்பார்த்த லாபத்தை தரும். வருமானம் உயரும். வீட்டில் புதிய பொருள்கள் சேரும். செப். 28 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் ஏற்பட்ட பயம் போகும்.சந்திராஷ்டமம்: செப். 30.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 24, 29. அக். 2, 6, 11, 15.பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்எந்த ஒன்றையும் துணிச்சலாக எதிர் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, புரட்டாசி அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் நட்சத்திர அதிபதியும், தைரிய வீரிய காரகருமான செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களைத் தேடி வந்து நட்பு பாராட்டுவர்.  உடல்நிலையும் மனநிலையும் சீராகும். உங்களை பாதிப்பிற்குள்ளாக்கி வந்த பிரச்னைகள், சங்கடங்கள், நோய்கள் விலகும். எந்த ஒன்றிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செப்.29 முதல் புதனும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வர வேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அக். 8 முதல் சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சுக ஸ்தான கேது ஆரோக்கியத்தில் சங்கடங்களை ஏற்படுத்தினாலும், 6ம் இடத்தைப் பார்க்கும் குருவும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் நோய் நொடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பர். சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்கள். அதிர்ஷ்ட காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். உங்கள் தோற்றத்தில் மிடுக்கும் பொலிவும் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: அக். 1.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.பரிகாரம் அர்த்த நாரீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !