உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / மாத ராசி பலன்

மாத ராசி பலன் ரிஷபம்

ரிஷபம்ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்!உழைப்பை மூலதனமாகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லைகள், எதிரிகளால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இணக்கமற்ற நிலை இருக்கும். தாய்வழி உறவுகளும் உங்களுக்கு எதிராக மாறக்கூடும். ஞான மோட்சக்காரகன் கேதுவும் நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளில் தடைகளும் தாமதமும் குழப்பமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள் புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். குருப்பார்வைகளால் திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம்தரும்.பெரியோரின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மை அளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமானதாக இருக்கும். படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஆக. 22, 23.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 24, 28. செப். 1, 6, 10, 15.பரிகாரம்: வில்வ வனேசுவரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.ரோகிணி: தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே முயற்சிப்பது நன்மையை உண்டாக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி பொறாமை பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த லாபம் வரும். சேமிப்பு உயரும் என்றாலும், மாதத்தின் பிற்பகுதியில் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நன்மையினை உண்டாக்கும். சிலருக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் சுய ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது அவசியம். மாணவர்களுக்கு வித்யா காரகன் புதனின் சஞ்சாரம் மாதத்தின் முற்பகுதியில் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 29. செப். 2, 6, 11, 15.பரிகாரம் : முக்தீஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பூமிக்காரகனான செவ்வாய் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் விவசாயம் லாபம்தரும். விளைச்சல் மீது கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு இருக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும் என்றாலும், வார்த்தைகளில் நிதானமும் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் நன்மையளிக்கும். தனக்காரகனான குருவின் பார்வைகள் களத்திர, பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் விவாகரத்துவரை நீதிமன்றத்திற்கு சென்றவர்கள்கூட பெரியோரின் ஆலோசனைகளை ஏற்று மீண்டும் இணைந்து வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். மாதத்தின் முற்பகுதியில் பணப்புழக்கம் இருக்கும். புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். சிலருக்கு வரன் தேடிவரும். கலைத்துறையினருக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். எடுக்கும் முயற்சி ஆதாயம்தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 24.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 27. செப். 6, 9, 15.பரிகாரம்: ஸ்ரீவாஞ்சிநாதரை வழிபட உடல்நிலை சீராகும். ஆரோக்யம் மேம்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !