மாத ராசி பலன்
மாத ராசி பலன் சிம்மம்
சிம்மம்சிம்மம்மகம்அனுபவங்களை படிப்பினையாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் ஞான மோட்சக் காரகன் கேது மனதில் குழப்பத்தையும் தேவையற்ற சிந்தனைகளையும் உண்டாக்குவார். எத்தனை முயற்சி செய்தாலும் கடைசி நேரத்தில் இழுபறியான நிலை ஏற்படும். நீங்கள் பெரிதும் நம்பி இருந்த நண்பர்களும் அவசர ஆபத்திற்கு உதவாமல் நகர்ந்து விடுவார். செய்து வரும் வேலையில் நெருக்கடி இருக்கும். மேல் அதிகாரிகளும் உங்களுக்கு உதவி புரிய முடியாத நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு பலன் தராமல் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரித்தாலும், அஷ்டம சளியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து உங்களை விடுவிப்பார். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்ப்பு நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பணியாளர்களில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழவேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும். பெண்கள் இந்த நேரத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மையாகும். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். விவசாயிகளுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 6.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 19, 25, 28. ஜூலை 1, 7, 10, 16.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரம்செல்வம் செல்வக்கோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவரின் உடல்நிலையை எண்ணி சங்கடப்பட்டு வந்த பெண்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும். தாலி பலம்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் லாபாதிபதி புதன் மாதத்தின் முற்பகுதியில் வக்கிரம் அடைந்திருப்பதால் புதிய முயற்சிகளில் நிதானம் காப்பது நன்மையாகும். ஜூலை 8 முதல் லாப புதனால் எடுத்த வேலைகள் லாபம்தரும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். உங்களை விட்டு விலகிச்சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். வருவோருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். மனம் தெளிவடையும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜூலை 7.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28. ஜூலை 1, 6, 10, 15.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.உத்திரம் 1 ம் பாதம்முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி வேலைகள் லாபம் தரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வெளிநாடு செல்வதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு நிரந்தர குடியுரிமை என்ற கனவு நனவாகும். பெரியோர் ஆதரவு கிடைத்து முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும் மெமோ இடைநீக்கம் என்று சங்கடங்களை அனுபவித்து சோர்ந்து போனவர்களுக்கு அவற்றிலிருந்து மாற்றம் ஏற்படும். நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியமும் தடைபட்ட பதவி உயர்வும் வரும். மனதில் நிம்மதி உண்டாகும். விரய குருவால் செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் மனதில் மகிழ்ச்சி இருக்கும். நோய் நொடி விலகும். அஷ்டம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் இல்லாமல் போகும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும். வேலைப் பார்க்கும் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்கள் தவறான நட்புகளை விலக்கி படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 8.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 28. ஜூலை 1, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.