உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / மாத ராசி பலன்

மாத ராசி பலன் தனுசு

தனுசுதனுசுமூலம்நடப்பவை யாவும் நன்மைக்கே என்று வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். செய்யாத தவறுக்கும் சிலர் தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். நன்றாகப் பழகி வந்தவர்களும் இந்த நேரத்தில் உங்களுக்கு மறைமுகமாக தொல்லைகள் கொடுப்பர். இரண்டாம் இடத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிக்கல்களும் பிரச்னைகளும் ஏற்படும். பணவரவில் எதிர்பாராத தடை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். இந்த நேரத்தில் உங்கள் பாக்கியாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் இழுபறியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், மேலதிகாரிகளால் சங்கடம் என்று எதிர்மறையான பலன்கள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல் நிலையிலும் மன நிலையிலும் பின்னடைவு உண்டாகும். வியாபாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் போராடி வெற்றிபெற வேண்டிய நாளாக இருக்கும். 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக செயல்படுவது நன்மை அளிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு இடுப்பறியாகும். ஜென்ம ராசிக்கும் சனி பகவானின் பார்வை உண்டாவதால் முயற்சியில் தடைகளும் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் வந்துபோகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 28, 29.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 25, 30. டிச. 3, 7, 12.பரிகாரம்: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.பூராடம்எந்த ஒன்றிலும் போராடி வெற்றிபெறக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய நண்பர்களால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் ஜீவனாதிபதி புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். செல்வாக்கு அதிகரிக்கும் என்றாலும், அஷ்டமக் கேதுவால் அவ்வப்போது சில நெருக்கடிகளும் தோன்றும். மனம் சங்கடத்திற்கு ஆளாகும். மறைமுகத் தொல்லைகளால் வேதனை அதிகரிக்கும். அரசு வழியிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகும். வம்பு வழக்கு பிரச்னை என்று சிலருக்கு சங்கடங்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். நட்பின் ஆதரவால் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். விவசாயிகளுக்கு விளைச்சலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும்.சந்திராஷ்டமம்: நவ. 29, 30.அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24. டிச. 3, 6, 12, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட மனதில் இருந்த குழப்பம் விலகும்.உத்திராடம் 1 ம் பாதம்நினைப்பதை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பாக்கியாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரும் வருமானம் எல்லாம் மறுபக்கம் போய்க் கொண்டிருக்கும். தேவையற்ற செலவுகளால் நெருக்கடி உண்டாகும். மனதிலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கும் என்றாலும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு பகவானும், பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவர். உங்கள் ராசிக்கு குருப்பார்வை உண்டாவதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி இடம் உண்டாகும். பட்டம் பதவி என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 30.அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 21, 28. டிச. 1, 3, 10, 12.பரிகாரம்: ராஜ கணபதியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !