/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (24.10.2025 - 30.10.2025)கும்பம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: செவ்வாய் பகவான் திங்கள் கிழமை முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது.சதயம்: ராசிக்குள் ராகு, சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. தவறான நபர்களை விட்டு விலகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடாதீர்கள்.பூரட்டாதி 1,2,3: குருவின் பார்வை எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.