வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (6.6.2025 - 12.6.2025)கும்பம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் செவ்வாய் இணைவதால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழிலில் உங்கள் நேரடிப்பார்வை தேவை. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.சதயம்: ராசிக்குள் சனி, ராகு சஞ்சரித்தாலும் 5 ம் இட உள்ள குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் நிலை உயரும். நெருக்கடி விலகும். நினைப்பது நடக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி, போராட்டம் விலகும். 5 ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் லாபம் தரும். எண்ணியது நடக்கும். வெள்ளிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 4.6.2025 காலை 11:24 மணி - 6.6.2025 இரவு 10:18 மணி