/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (11.7.2025 - 17.7.2025)கும்பம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். குரு உங்கள் கனவுகளை நனவாக்குவார்.சதயம்: ராசிக்குள் ராகு சஞ்சரித்தாலும், குருவின் சஞ்சாரம் உங்கள் நிலையை உயர்த்தும். அவருடைய பார்வைகளால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். நேற்று தள்ளிப்போன வேண்டுதல் இன்று நிறைவேறும்.