/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (5.9.2025 - 11.9.2025)கும்பம்: திருவாலங்காடு வடாரண்யேசுவரரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: செவ்வாயால் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மருத்துவ செலவு அதிகரிக்கும். குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும் என்ற நிம்மதி உண்டாகும். சதயம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் விருப்பம் பூர்த்தியாகும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி புகழ் கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: குருபகவானால் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். திருமணவயதினருக்கு வரன் வரும்.