உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)கும்பம்: தில்லை காளியை எல்லையில் நின்று வழிபட சங்கடம் நீங்கும்.அவிட்டம் 3,4: குருபார்வையுடன் சஞ்சரிக்கும் செவ்வாயால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு திங்களில் நிதானம் தேவை.சதயம்: குருவும் அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கடி, சங்கடம், போராட்டம் என்ற நிலை மாறும். அந்தஸ்து உயரும், புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். திங்கள் செவ்வாயில் புதிய முயற்சி வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றமடையும். செவ்வாய்க்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 21.9.2025 மாலை 5:19 மணி - 24.9.2025 அதிகாலை 3:24 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !