உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன்  3.10.2025 - 9.10.2025கும்பம்: திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: பாக்ய ஸ்தான செவ்வாய் புதனுக்கு குரு பார்வை கிடைப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் முயற்சிக்கு பெரியோரின் ஆதரவு உண்டு. வருவாய் அதிகரிக்கும். சதயம்: ஜென்ம ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும். எடுத்த வேலை லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !