உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)கும்பம்:பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய வாரம் இது. இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.சதயம்: புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3:உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். செய்து வரும் தொழில்  லாபம்தரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !