வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (26.12.2025 – 1.1.2026)கும்பம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 3,4: இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். சதயம்: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் உங்கள் செல்வாக்கு உயரும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். கையில் பணம் புரளும்.