உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )கும்பம்: காளிகாம்பாளை வழிபட்டுவர சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: லாப ஸ்தான செவ்வாயால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.சதயம்: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் கூட்டணியால் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். அரசு வழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரட்டாதி 1,2,3: தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !