/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (23.1.2026 - 29.1.2026)கும்பம்: தில்லை காளியை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிலும் போராட்டமாக இருக்கும். உடல்நிலையிலும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். சுற்றி இருப்பவர்களால் சங்கடம் ஏற்படும். சதயம்: நிதானமாக செயல்பட வேண்டிய வாரமிது. நன்றாகப் போய்க்கொண்டிருந்த வியாபாரம் தொழிலிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் சட்ட சிக்கலுக்கும் ஆளாவீர்கள் என்பதால் அமைதி காப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: எடுக்கும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். வருமானக்குறைவின் காரணமாக வீடு, நிலம் என்று விற்று நிலைமையை சரி செய்ய வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். குடும்பத்தினரிடம் கோபம் வேண்டாம். இந்த நேரத்தில் நிதானம் காப்பது நல்லது.