உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)கும்பம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும். சிலர் பரம்பரை சொத்துகளை விற்று நிலைமைகளை சரி செய்வீர். புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொள்வது நன்மையளிக்கும்.சதயம்: கூட்டு கிரகங்களால் மனம் அலைமோதும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எதிலும் ஒரு உறுதியான முடிவிற்கு வரமுடியாத அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். நிதானமாக செயல்படுவதும், புதிய முதலீடுகளை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த சுமூகமான நிலை மாறும். எதிர்ப்பும் போட்டியும் அதிகரிக்கும். வரவு ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் அதற்காக செலவு காத்து இருக்கும்.உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். மனைவியின் ஆலோசனையை ஏற்பதும் நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !