/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (20.2.2026 - 26.2.2026)கும்பம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: குழப்பம் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். எதிலும் போராட்டமாக இருக்கும். உடல்நிலையிலும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். சுற்றி இருப்பவர்கள் உங்களை சங்கடப்படுத்துவர்.சதயம்: நிதானமாக செயல்பட வேண்டிய வாரமிது.வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலையில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். குடும்பத்தினர் ஆலோசனை உங்கள் சங்கடங்களை போக்கும். முயற்சிக்கு ஏற்ற லாபம் உண்டு.