உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)கும்பம்: சங்கர நாராயணரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சூரியன் சனி சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சிறு சங்கடம் இருக்கும். பண வரவில் எதிர்பாராத தடை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும் என்பதால் அனைத்திலும் நிதானம் காப்பதும் செயல்படுவதும் நல்லது.சதயம்: ராசியில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் ஆசை பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நேற்றைய கனவு நனவாகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். குடும்பம் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் நிலை உயரும். பிரச்னை விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.சந்திராஷ்டமம்: 31.3.2026 இரவு 10:05 மணி - 3.4.2026 காலை 6:32 மணி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !