வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (17.4.2026 - 23.4.2026)கும்பம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் கனவு நனவாகும். நேற்று தடைபட்டு வந்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சதயம்: ராசிக்கு குரு பார்வை உண்டாவதுடன் சகாய ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்.