வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (1.5.2026 - 7.5.2026)கும்பம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் அவசியம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தேவைக்கேற்ற பணம் வரும்.சதயம்: அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசுவழி முயற்சி வெற்றியாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர். கையில் பணம் புரளும். புதிய இடம் வீடு வாங்க முடியும். வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.