உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)கும்பம்: துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் நேற்று தடைபட்ட வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைக விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சதயம்: ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: நன்மையான வாரம் இது. வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.  தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும், சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !