/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )கும்பம்: துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: செவ்வாய் பகவனால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சதயம்: குருப்பார்வையால் செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர் பார்த்த தகவல் வரும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது.