உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )கும்பம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு உடல் நிலையில் சங்கடம் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். ஞாயிறு திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சதயம்: குரு பார்வையால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சிப் பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பூரட்டாதி 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். செவ்வாய் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 21.6.2026 இரவு 9:18 மணி - 24.6.2026 அதிகாலை 4:58 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !