உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )கும்பம்: குல தெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நன்றாக சென்று கொண்டிருந்த வேலையில் தடை தாமதம் ஏற்படும். தொழிலில் எதிர்ப்பு ஏற்படும்.சதயம்: குருவினால் சனியின் பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குரு பார்வையால் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எந்த ஒன்றிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: குரு சுக்கிரனால் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். எதிரிகளால் பிரச்னை உண்டாகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !