உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

 வார பலன் (24.7.2026 – 30.7.2026)கும்பம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத வேலை வந்து சங்கடப்படுத்தும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பது போல் மறுநேரம் இல்லாமல் போகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்துவீர்கள்.சதயம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வம்பு வழக்கு என்ற நிலை இல்லாமல் போகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய தைரியம் பிறக்கும்.பூரட்டாதி 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசுவழியில் மேற்கொண்ட வேலை சாதகமாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். எதிர்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !