உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன்( 31.7.2026 - 6.8.2026)கும்பம்: மாரியம்மனை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.அவிட்டம் 3,4: உழைப்பு கூடும். வேலைபளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். மனதில் தேவையற்ற சிந்தனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள் முதல் செய்யவும்.சதயம்: பாத சனி வக்கிரம், ஆறாமிட குரு அஸ்தமனம் ஆகி இருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். கடக சூரியனால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். போட்டியாளர் தொல்லை விலகும். வழக்கில் வெற்றி உண்டாகும். உடல்நிலை சீராகும்.பூரட்டாதி 1,2,3: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தம்பதிக்குள் இணக்கமற்ற நிலை இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டுத்தொழிலில் ஏதேனும் பிரச்னைகள் தோன்றும். ஞாயிற்றுக்கிழமை முதல் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தை விட்டு நகர்வதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !