உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)கும்பம்: பகவதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 3,4: எதிர்பாராத செலவும், அலைச்சலு உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் இருக்கும். ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு எதிர்பாராத வேலைகள் வந்து சங்கடப்படுத்தும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும்.சதயம்: உங்கள் நிலையை மீறி அதிகப்படியான முயற்சியை மேற்கொள்வீர். வாழ்க்கையில், தொழிலில் நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்படும். மனம் குழப்பமடையும். எதிரிகளின் கை ஓங்கும் என்றாலும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !