வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (28.8.2026 - 3.9.2026)கும்பம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 3,4: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மனக்குழப்பமும், உழைப்பும் அதிகரிக்கும். வேலைபளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள்முதல் செய்வது அவசியம். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.சதயம்: பாத சனி வக்கிரம் ஆகி இருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வழக்கமான வேலைகளிலும் நிதானம் தேவை.பூரட்டாதி 1,2,3: ஆறாமிடத்தில் குரு உச்சமாக சஞ்சரித்து நோய் நொடி எதிர்ப்பை உண்டாக்கினாலும் அவருடைய பார்வைகளால் செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். வீண் செலவு குறையும்.