வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (4.9.2026 - 10.9.2026)கும்பம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: ஐந்தாமிட செவ்வாய் மனதில் இனம் புரியாத குழப்பத்தை உண்டாக்குவார். பிள்ளைகளால் மனம் சங்கடப்படும். சிலருக்கு வீண் பிரச்னை தேடி வரும். பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானமாக இருப்பது நல்லது. சதயம்: எதிர்ப்பையும், கவலையையும் ஆறாமிட குரு உண்டாக்கினாலும், அவருடைய பார்வையாலும் எட்டாமிட புதனாலும் தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: குரு பார்வையால் வியாபாரம், தொழில் லாபம் தரும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பாக்கிய சுக்கிரனால் பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.