வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (16.10.2026 - 22.10.2026 )கும்பம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். இதுவரை இருந்த போராட்ட நிலை மாறும். எடுத்த வேலை வெற்றியாகும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சதயம்: ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிலையில் அதில் இருந்து விடுபடுவீர்கள். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.பூரட்டாதி 1,2,3: குருவின் சஞ்சாரம் உங்களைப் பாதுகாக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவிகள் தேடி வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரிகள் பலவீனம் அடைவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.