உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் (30.10.2026 - 5.11.2026)கும்பம்: துர்க்கையை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: சத்ரு ஜெய ஸ்தான செவ்வாயால் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். உற்சாகமுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சொத்து வகையில் ஏற்பட்ட சச்சரவு முடிவிற்கு வரும். ஆரோக்கியம் சீராகும்.  வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நன்மை அளிக்கும்.சதயம்: உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடன் இருந்து உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்களை கண்டு அறிந்து விரட்டுவீர். வருமானம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: சப்தம ஸ்தான குரு கேதுவால் வியாபாரம் தொழில் லாபம் தரும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.சந்திராஷ்டமம்: 5.11.2026 மதியம் 12:13 மணி - 7.11.2026 மாலை 6:40 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !