உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் (13.11.2026 - 19.11.2026)கும்பம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: ஆறாமிட கேதுவால் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சதயம்: ராசியை விட்டு ராகு விலகி இருக்கும் நிலையில் சப்தம குருவால் உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். கையில் பணம் புரளும்.பூரட்டாதி 1,2,3: சப்தம குருவும், செவ்வாய்க்கிழமை முதல் ஜீவன ஸ்தானத்திற்கு வரும் சூரியனும்  உங்கள் நிலையை உயர்த்துவார். இதுவரை போராட்டமாகவும் பிரச்சனையாகவும் இருந்த உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவிகள் தேடிவரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !