/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (24.10.2025 - 30.10.2025)மகரம்: குருவை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். தொழில் லாபம் தரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: லாப ஸ்தானத்தில் திங்கள் கிழமை முதல் குரு பார்வையுடன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விற்பனை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.