வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (27.6.2025 - 3.7.2025)மகரம்: நவக்கிரகங்களை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரிய பகவானால் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். தடைபட்ட வேலை நடக்கும். குரு அஸ்தமனமாகி இருப்பதால் நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும். ஞாயிறு அன்று செயல்களில் கவனம் தேவை.திருவோணம்: சுக்கிரன் சூரியன் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். அரசுவழி முயற்சி சாதகமாகும். வழக்கு வெற்றியாகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். திங்கள்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. எதிரிகளால் சிலருக்கு மனஉளைச்சல் ஏற்படும். இக்காலத்தில் விவேகமாக செயல்படுவது நல்லது. சூரியன் உங்களைப் பாதுகாப்பார். செவ்வாய்க்கிழமை கிழமை செயல்களில் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 29.6.2025 காலை 10:25 மணி - 1.7.2025 மாலை 6:57 மணி