உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (11.7.2025 - 17.7.2025)மகரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரிய பகவானால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். எதிர்ப்பு விலகும்.திருவோணம்: குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செலவு கட்டுப்படும்.  எதிர்பார்த்த பணம் வரும். தொழில் விருத்தியாகும். சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் நம்பிக்கை இருக்கும். செயல் வெற்றியாகும்.அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். செயல்களில் எதிர்பாராத தடையுண்டாகும். சுலபமாக முடிய வேண்டிய வேலையிலும் இழுபறி ஏற்படும். குருவின் பார்வை உங்களைப் பாதுகாக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !