வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (22.8.2025 - 28.8.2025)மகரம்: பைரவரை வழிபட பயம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரியன், கேது எட்டாமிடத்தில் இருப்பதால் உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். முயற்சிகள் இழுபறியாகும். சப்தம சுக்கிரனால் எதிர்பாலினர் வழியே சிலர் பிரச்னையை சந்திப்பர். சனிக்கிழமை செயல்களில் கவனம் தேவை.திருவோணம்: திங்கள் முதல் புதன் சாதகமாக பலன் கிடைக்கும். நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரி, கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். 8ல் சூரியன் கேது இருப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. ஞாயிறன்று புதிய முயற்சிகள் வேண்டாம்.அவிட்டம் 1,2: 9ல் செவ்வாய், 6ல் குரு இருப்பதால் எதிர்ப்பு வலுக்கும். சுமூகமாக நடந்த வேலைகளில் நெருக்கடி ஏற்படும். உடல்நிலையில் திடீரென சங்கடம் தோன்றும். தொழிலில் புதிய முதலீடு வேண்டாம். ஞாயிறு, திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 23.8.2025 அதிகாலை 1:54 மணி - 25.8.2025 காலை 9:58 மணி