உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (10.10.2025 - 16.10.2025)மகரம்: சங்கர நாராயணரை சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: பாக்ய சூரியனால் மனதிற்குள் இனம் புரியாத பயம் தோன்றும். செயல்களில் குழப்பம் உண்டாகும். சப்தம குருவால் நினைத்ததை நடத்தி முடிப்பீர். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.திருவோணம்: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேவைக்கேற்ற வருமானம் வரும். எட்டாமிட கேது எதிர்ப்பை அதிகரிப்பார். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்துவார். எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2:  உங்கள் வேலைகளில் லாபம் உண்டாகும்.  முயற்சிகள் வெற்றியாகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: 16.10.2025 மாலை 5:08 மணி - 19.10.2025 அதிகாலை 12:37 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !