வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் 17.10.2025 - 23.10.2025மகரம்: பைரவரை வழிபட நன்மை நடக்கும். மனக்குழப்பம் போகும்.உத்திராடம் 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடியும். உத்தியோக நெருக்கடி குறையும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வெள்ளிக்கிழமை வேலைகளில் கவனம் தேவை.திருவோணம்: குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் இதுவரை இருந்த சங்கடம் இல்லாமல் போகும். விருப்பம் நிறைவேறும், இடம், வீடு, வாகனம், பொன் பொருள் என்ற கனவு நனவாகும். வெள்ளி சனிக்கிழமைகளில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.அவிட்டம் 1,2: ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரித்தாலும் சப்தம குருவால் உங்கள் சங்கடம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் உள்ள நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சனிக்கிழமை நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 16.10.2025 மாலை 5:08 மணி - 19.10.2025 அதிகாலை 12:37 மணி