உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)மகரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரியனால் உங்கள் வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். செயல்களில் வெற்றி உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாழக்கிழமை அன்று விழிப்புணர்வு தேவை.திருவோணம்: உச்ச குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தேவைக்கேற்ற வருமானம் வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவருக்கு மதிப்பு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: செவ்வாய் பகவானால் வேலைகளில் லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.சந்திராஷ்டமம்: 13.11.2025 அதிகாலை 12:52 மணி - 15.11.2025 காலை 8:07 மணி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !