/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (21.11.2025 - 27.11.2025)மகரம்: மயிலை கற்பகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: அரசு வழி வேலை வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரங்களிலும், வார்த்தைகளிலும் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: லாப ஸ்தானாதிபதி செவ்வாயால் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.