உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (26.12.2025 – 1.1.2026)மகரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.உத்திராடம் 2,3,4: விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையாகும். செலவு கட்டுங்கடங்காமல் போகும். கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலையும் சிலருக்கு உண்டாகும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம்.திருவோணம்: வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நன்மையாகும். அரசு வழியில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை தள்ளிப்போடுவது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம்.அவிட்டம் 1,2: விரய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன், அஷ்டம ஸ்தானத்தில் கேது என்று சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். வரவேண்டிய வருமானம் தள்ளிப்போகும். குடும்பத்திலும் உங்கள்மீது அதிருப்தி ஏற்படும் என்பதால் வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையாகும் 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !