உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 ) மகரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பாராத செலவு ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலையும் பாதிக்கப்படும் என்பதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் கேது என்று சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். அவசர செலவிற்காகவும் பணம் கிடைக்காமல் நெருக்கடிக்கு ஆளாவீர்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். கடன் கொடுத்தவர்  தேடிவருவர். அவசர செலவிற்காக இடம் வீடு போன்றவற்றை விற்க வேண்டிய நிலையும் வரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக நிறைய போராடுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !