வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (23.1.2026 - 29.1.2026)மகரம்: நவக்கிரக சனிபகவனை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.உத்திராடம் 2,3,4: ராசிக்குள் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வேலைகளில் பதட்டம் ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். அனைத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.திருவோணம்: கேதுவின் சஞ்சரத்தினால் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அரசு வழியில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதால் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம்.அவிட்டம் 1,2: ராசிக்குள் இருக்கும் கிரகங்களால் மனம் குழப்பம் அடையும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சி இப்போது வேண்டாம்.