உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)மகரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையில் பதட்டமும் நெருக்கடியும் இருக்கும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பது போல் மறுநேரம் இல்லாமல் போகும். அரசு வழியிலும் நெருக்கடிக்கு ஆளாவீர். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: ராசிக்குள் சூரியன், செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் கேது என சஞ்சரிப்பதால்  வேலையில் குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.அவிட்டம் 1,2: செவ்வாய் ராசிக்குள் நீச்சம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் ஒரு தொய்வு இருக்கும். இடம் வீடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சட்ட சிக்கல்கள் உருவாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !