உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)மகரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சனி பகவானின் பார்வையால் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும். லாபத்தை நோக்கி நடைபோடுவீர். உழைப்பு அதிகரிக்கும். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை.திருவோணம்: சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரனால் நன்மை நடக்கும். சில விஷயங்கள் எதிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் போகும். தொழில், வியாபாரம், உத்தியோகம், பணம், உடல்நிலை என அனைத்திலும் கவனம் தேவை.அவிட்டம் 1,2: ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் ஒருமுறைக்கு நூறுமுறை யோசிப்பது நன்மையாகும். புதிய முதலீடுகள், முயற்சிகள் இந்த நேரத்தில் எதிர்மறையான நிலையை உண்டாக்கிட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !