உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)மகரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திராடம் 2,3,4: அவசர வேலைகளால் ஏற்பட்டு உங்களை அலைக்கழிக்கும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையில் ஏதேனும் ஒரு பாதிப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் இணக்கமற்ற நிலை ஏற்படும். திங்கள்கிழமை அனைத்திலும் பொறுமை காப்பது நன்மையாகும்திருவோணம்: புதிய முயற்சிகளை முடிந்தவரை ஒத்தி வைப்பது நன்மையாகும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.  வியாபாரம், தொழிலில் உங்கள் நேரடி கண்காணிப்பு அவசியம். வார்த்தைகளில் நிதானம் தேவை. செவ்வாய்க்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். உடல்நிலையிலும் மன நிலையிலும் பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். புதன்கிழமை விழிப்புடன் செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: 2.3.2026 காலை 8:20 மணி - 4.3.2026 மதியம் 2:37 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !