வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )மகரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரத்திலும், பேச்சிலும் கவனம் தேவை. அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.திருவோணம்: ஏழரை சனிக்காலம் முடிந்து சனி பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.அவிட்டம் 1,2: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். மறைமுக எதிரிகளின் கை ஓங்கும். உங்கள் வேலைகளில் ஒரு தொய்வு இருக்கும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். குடும்பத்திற்குள் நெருக்கடி அதிகரிக்கும்.