உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)மகரம்: திருப்போரூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பிரச்னை,  போராட்டம் எல்லாம் முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ஆதாயத்தை நோக்கி நடைபோடுவீர்.திருவோணம்: எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பதுடன் அவற்றை முடித்து லாபமும் காண்பீர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.அவிட்டம் 1,2: ஒவ்வொரு வேலையையும் யோசித்து செய்வது நல்லது. புதிய முதலீடு, முயற்சிகளில் நிதானம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதுடன் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !