வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)மகரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சூரியன், சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமாக நடைபோடுவீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும், தடைபட்ட வேலை நடக்கும்.திருவோணம்: சகாய ஸ்தானம் பலமடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். அவிட்டம் 1,2: ருண ரோக ஸ்தானத்தில் குரு, அஷ்டம ஸ்டானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். எதிரி கை ஓங்கும். உங்கள் வேலைகளில் ஒரு தொய்வு இருக்கும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். சகாய செவ்வாயால் அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.