/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (1.5.2026 - 7.5.2026)மகரம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் வரும். உங்களுக்கேற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம், தொழிலை விரிவு செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.திருவோணம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுக்கும் வேலைகளை முடிக்கும் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் சிறு சிறு பிரச்சனைகளும், மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.அவிட்டம் 1,2: வியாபாரம் தொழில் எதிர்பார்த்த லாபம் தரும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். உங்களுடைய வேலை எதுவாக இருந்தாலும் அதை நீங்களே முன்னின்று நடத்துவது நல்லது.